தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் பிப்.26 அறிவித்தது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், சென்னைமாநகராட்சிஅலுவலகத்தில்மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில்தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாகஅனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த மாதிரியான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுகூட்டம், பேரணி நடத்த அனுமதி வாங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. 196 இடங்களில் மட்டுமே பொதுகூட்டம் நடத்த வேண்டும், சுவிதா என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற ஒத்துழைக்க வேண்டும் தபால் வாக்கு யாருக்கு ? 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு வகையான மாற்று திறனாளிகள், கரோனா தொற்று மற்றும் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 12டி படிவத்தை மார்ச் 16ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். சென்னையில் ஏறக்குறைய 8 ஆயிரத்து 500 மாற்றுதிறனாளிகள் உள்ளனர். அதேபோல, 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 2721 போஸ்டர், 9561 சுவர் விளம்பரங்கள், 239 பேனர்கள் என 12,366 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு பொருந்தும். 48 பறக்கும் படை சென்னையில் பணியில் உள்ளது. இதுவரை 10 புகார்கள் பெறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில்கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.