சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான சசிகலா இன்று (பிப்.08) கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அதிமுக, அமமுக கட்சி தொண்டர்கள் சாலை நெடுகிலும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அமமுக வாகனங்களை திருப்பி அனுப்பும் காவல் துறை!
சென்னை எல்லையான செப்பேடு பகுதியில் அமமுக வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Police to return AMMK PArty vehicles at the Chennai border
காலை 8 மணிக்கு தொடங்கிய அவரது பயணம் தற்போது வேலூர் நெருங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூரில் காவல் துறையினர் சோதனைச்சாவடி அமைத்து அமமுகவினரின் கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி சென்னைக்கு அனுப்ப மறுத்து, வாகன எண்ணைகளை குறித்துக் கொண்டு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன் - சசிகலா