தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடப் புத்தக பிழைகள் குறித்து ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு!

சென்னை: தமிழ்நாடு மாநில பாடப் புத்தகங்களில் உள்ள தவறுகளை கண்டறிந்து ஆசிரியர்களிடம் நேரடியாக கருத்துக் கேட்டு அதனை நீக்குவதற்கு மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பாடப்புத்தக பிழைகள் குறித்து ஆசிரியர்களிடம் நேரடியாக கருத்து கேட்பு!

By

Published : Jul 30, 2019, 9:21 PM IST

தமிழ்நாட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் புதிதாக மாற்றி எழுதப்பட்டு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட பாடப் புத்தகத்தில் பல்வேறு எழுத்துப் பிழை, கருத்துப் பிழைகள் உள்ளது என கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை பரிசோதித்து தவறுகள் உறுதி செய்யப்பட்ட பின் அவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்கம் சரி செய்துவருகிறது.

இந்நிலையில், பாடப் புத்தகங்களில் உள்ள அனைத்து தவறுகளையும் களைந்து மாணவர்கள் எளிதில் பாடங்களை படிக்கும் வகையில் கடினமான சொற்களை நீக்கவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் முதுநிலை விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடம் புதிய பாடப் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகள், பிழைகளை எழுதிப் பெற வேண்டும்.

பாடப் புத்தகத்தில் படத்தினை எடுக்கும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்கும்போது பத்தி, தொடர் சொல் எழுத்து பாட கருத்து ஆகியவற்றில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதனை வகுப்பு பாடம், அலகு பாடப்பகுதி, பாடப்பொருள் என வரிசையாக குறிப்பிட்டு அட்டவணைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி ,பயிற்சி நிறுவனத்தில் பாடப்புத்தகங்கள் எழுதிய வல்லுநர் குழு, ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு தேவையான கருத்துக்கள் திருத்தம் செய்யப்பட்டும். இனி வரும் கல்வி ஆண்டில் பிழையின்றி பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details