தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள தேவசம்போர்டில் பட்டியலின அமைச்சர்: மெச்சிய திருமா, தமிழில் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்!

”முன்பு தமிழ்நாட்டில் பி ஆர் பரமேஸ்வரன். இன்று கேரளாவில் இராதாகிருஷ்ணன். ஆதிக்குடியினம் சார்ந்த ஒருவரை தேவசம் போர்டு அமைச்சராக்கி, சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்து சாதித்திருக்கிறார் பினராயி விஜயன்“ - தொல் திருமாவளவன் எம்பி

மெச்சிய திருமா தமிழில் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்
மெச்சிய திருமா தமிழில் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்

By

Published : May 20, 2021, 10:54 PM IST

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப் கூட்டணி 99 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று (மே.20) பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பினராயி விஜயன்

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்கிறார். அவருக்கும், அவரது அமைச்சவரையில் இடம்பெற்றுள்ள 21 பேருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தேவசம்போர்டு அமைச்சர் பதவி

இம்முறை அமைச்சரவையில் முழுவதுமாக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்வோம் போர்ட் எனப்படும் இந்து அற நிலையத் துறையின் அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில வரலாற்றில் முதன்முறையாக...

கேரள இடதுசாரிக் கூட்டணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு விடுதலை சிறுதலைக் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

திருமாவளவன் ட்வீட்

அதில், கேரளாவில் இராதாகிருஷ்ணன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் துணிச்சலை விசிக நெஞ்சாரப் பாராட்டுகிறது. 50ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பி ஆர் பரமேஸ்வரன். இன்று கேரளாவில் இராதாகிருஷ்ணன். வெல்லும் சமூகநீதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பினாராயி விஜயன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஆதிக்குடியினம் சார்ந்த ஒருவரை தேவசம் போர்டு அமைச்சராக்கி, சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்து சாதித்திருப்பவர். வெல்க மார்க்சியம்” எனவும் ட்வீட் செய்துள்ளார்.

தமிழில் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்

இந்நிலையில் “தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நண்றிகள்” என பினராயி விஜயன் தமிழில் பதில் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details