சென்னை:தாம்பரம் மாநகராட்சி 63ஆவது வார்டு சென்மேரிஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் 407ஆவது பூத்தில் இளைஞர் ஒருவர் கார்த்திக் என்பவரின் பெயரில் வாக்களிக்க வந்துள்ளார்.
இதனையடுத்து உள்ளே சென்ற அவரின் ஆவணங்களைச் சரிபார்த்து கையில் மை வைத்த பிறகு வாக்களிக்கச் சென்றுள்ளார்.
அப்போது உள்ளே இருந்த திமுக வேட்பாளர் முத்துராமன் என்பவர் அந்த இளைஞர் மீது சந்தேகம் அடைந்து அவரை நிறுத்தி விசாரணை செய்ய அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அலுவலர்கள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் கார்த்திக் என்பவர் பெயரில் கள்ள ஓட்டு போடவந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர், தகவலின் அடிப்படையில் சென்ற காவல் துறையினர் இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தபோது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லவன் எனத் தெரியவந்தது.
இவர் கடந்த ஓராண்டாக தாம்பரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:இருமுறை வாக்களித்த கவுன்சிலர் - திருச்சியில் பரபரப்பு!