தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2021, 6:22 PM IST

ETV Bharat / state

பொழுதுபோக்கு கிளப்களில் கிரிமினல் வழக்குகள் இருந்தால் பதிவு ரத்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொள்ள வேண்டுமென்றும் கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் தொடரபட்டிருந்த வழக்கில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால் காவல் துறையினர், சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வது காவல் துறை அலுவலர்களின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது அரசு தரப்பில், கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் சட்டவிரோத பணம் வைத்து சூதாட்டம் நடப்பட்ட வழக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை ஐஜியை, தன்னிச்சையாக சேர்த்து உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவர் சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்கள், சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளை நடைபெறுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கிளப்புகளின் பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் இதுகுறித்து 12 வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யானைகளை தனிநபர்கள் வைத்திருக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details