தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர் உடலை புதைக்க விடாமல் தகராறில் ஈடுபட்டவர்கள் ஜாமீன் கோரி மனு

சென்னை: கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த 12 பேர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 30, 2020, 6:27 PM IST

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, தானும் கரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர் நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ்.

இவரது உடலை, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம், வேலாங்காடு இடுகாடுகளில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதுடன், அவரது உலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தாக்கியும், அரசு ஊழியர்களை தாக்கியும் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, டி. பி. சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் ஒரு பெண், 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான இளங்கோ, லோகேஷ்வரன், செந்தில்குமார், அண்ணாமலை, ஆனந்த், சோமசுந்தரம், குமார், மணிகன்டன், காதர் மொய்தீன் மற்றும் நிர்மலா ஆகிய 10 பேரின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, முன்னதாக ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தகராறு செய்தது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் அமர்வு தானாக முன் வந்து பொதுநல வழக்காக இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், அதனுடன் இணைத்து விசாரிக்கும்படி பரிந்துரைக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதி, 10 பேரின் ஜாமின் மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்துள்ளார்.

இதனிடையே, அண்ணா நகர் காவல் நிலைய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சோமசுந்தரம், சுரேஷ், விக்னேஷ் குமார், குமார் என்கிற பிச்சை, விஜய், மணி ஆகியோரும், டி.பி.சத்திரம் காவல் நிலைய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குமரேசன், மோகன், ஜெயமணி, ஜெயபிரபா, ஜெனிதா, தமிழ்வேந்தன் ஆகியோர் என 12 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி நடந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details