தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊருல தலைகாட்ட முடியாது: குமுறிய எம்எல்ஏ

சென்னை: ஆண்டிப்பட்டி பகுதியில் மக்கள் 5 ரூபாய்க்கு குடிநீர் வாங்குவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் தான் தொகுதிக்குள் செல்ல முடியாது எனவும் அப்பகுதி எம்எல்ஏ மகாராஜன் தெரிவித்துள்ளார் .

MLA Maharajan

By

Published : Jul 18, 2019, 11:26 PM IST

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், " வைகை அணையை தூர்வாரி 1 டிஎம்சி அளவிற்கு தண்ணீரை பெருக்க முடியம். எனவே உடனே வைகையை தூர்வார வேண்டும்.

மேலும், வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டிபட்டியில் உள்ள 300 கிராமங்களும், அதைச் சுற்றியுள்ள 150 கிராமங்களும் தடையின்றி குடிநீர் பெறும்.

ஊர் மக்கள் ஐந்து ரூபாய்க்கு தண்ணீர் வாங்குகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஊருக்குள் தன்னால் செல்ல முடியாது. இரண்டு முதலமைச்சர்களை தேர்ந்தெடுத்த தொகுதியின் தண்ணீர் பிரச்னையை விரைந்து சீர்செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது .

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "ஐந்து ரூபாய்க்கு தண்ணீர் வாங்கும் நிலை தேனியில் இல்லை. 24 மணிநேரமும் தண்ணீர் விநியோகம் உள்ளது.

அதுபோக, அந்த பகுதிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே எம்எல்ஏ மகாராஜன் தேனி மாவட்டத்தில் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம் யாரும் மறிக்க மாட்டார்கள்" என்றார். இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது .

ABOUT THE AUTHOR

...view details