தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கு: 11 ஆண்டுகள் கழித்து குற்றவாளி கைது

சென்னை: திரிசூலம் அருகே பஞ்சாயத்துத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 11 ஆண்டுகள் கழித்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றவாளி 11 ஆண்டுகள் கழித்து கைது
குற்றவாளி 11 ஆண்டுகள் கழித்து கைது

By

Published : Oct 5, 2020, 1:52 PM IST

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் ராமச்சந்திரன் (43). இவர் திமுகவைச் சேர்ந்தவர்.

ராமச்சந்திரன் அப்பகுதியில் ஒரு கல்குவாரியை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் வேல்முருகன் (40) என்பவருக்கும் இடையே தொழில்போட்டி இருந்துள்ளது.

குற்றவாளி 11 ஆண்டுகள் கழித்து கைது

மேலும் இரண்டு பேருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு வேல்முருகன் தப்பி சென்றுவிட்டார்.

வேல்முருகனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், 11 ஆண்டுகள் கழித்து திண்டிவனம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் வேல்முருகனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொட்டிலில் விளையாடிய 13 வயது சிறுவன்: சேலையில் கழுத்து இறுகி உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details