தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2021, 11:23 AM IST

ETV Bharat / state

4 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பல்லாவரம் வாரச்சந்தை

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பல்லாவரம் வாரச்சந்தை நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

pallavaram-market-opening-after-four-months-today
நான்கு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பல்லாவரம் வார சந்தை!

சென்னை:பல்லாவரம் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடக்கும். இச்சந்தை, 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கருவாடு முதல் கணினிவரை, குண்டூசி முதல் குளிர்சாதன பெட்டிவரை, வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இங்கு கிடைக்கும்.

பழைய பொருள்கள் தேவையெனில், இங்கு வந்தால் வாங்கிச் செல்லலாம். இதை தவிர, பூச்செடிகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் போன்றவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளிக்கிழமைதோறும், 500க்கும் அதிகமான கடைகள் போடப்படும். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து பொருள்களை வாங்கி செல்வர்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பல்லாவரம் வார சந்தை!

இதனால், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் இரவுவரை, திருவிழா போன்று காட்சியளிக்கும். இந்தளவிற்கு சிறப்பு மிக்க இந்த வாரச்சந்தை, கரோனா பரவல் காரணமாக நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், வாரச்சந்தை மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

பல்லாவரம் வாரசந்தை

ஆனால், வழக்கத்தைவிட குறைந்த கடைகளே போடப்பட்டிருந்தன. கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

இதையும் படிங்க:கொடைக்கானல் வாரச்சந்தை திறப்பு

ABOUT THE AUTHOR

...view details