தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரைவில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு' - துணை முதலமைச்சரிடம் நியூயார்க் தூதரக அதிகாரி உறுதி!

தமிழ்நாட்டில் நியூயார்க்கிலிருந்து தொழில் முதலீடுகள் செய்யப்படும் என அந்நாட்டின் இந்திய தூதரக அதிகாரி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் உறுதியளித்துள்ளார்.

By

Published : Nov 17, 2019, 3:16 PM IST

Updated : Nov 17, 2019, 3:40 PM IST

newyork

ஹூஸ்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க் சென்ற துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவது குறித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று (16.11.2019) நியூயார்க்கில் உள்ள தனியார் உணவகத்தில், நியூயார்க்கின் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது நியூயார்க்கின் இந்தியத் தூதரக அதிகாரி, துணை முதலமைச்சரிடம் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!

Last Updated : Nov 17, 2019, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details