தமிழ்நாடு

tamil nadu

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0..! கஞ்சா விற்பனை தொடர்ந்தால் குண்டர் சட்டம் - வார்ன் செய்த டிஜிபி

தமிழ்நாட்டில் மீண்டும் கஞ்சா விற்பனை தொடர்ந்தால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும்; அவர்களது சொத்துகள் முடக்கம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

By

Published : May 24, 2022, 7:02 PM IST

Published : May 24, 2022, 7:02 PM IST

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0..! கஞ்சா விற்பனை தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம்
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0..! கஞ்சா விற்பனை தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம்

சென்னைஆவடி ஆணையர் அலுவலகத்தில் இன்று(மே24) காலை ஆவடி ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

பின்னர் ஆவடி ஆணையரக சரகத்தில் நடைபெற்ற 30 குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 72 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கம் 218 சவரன், 100 செல்போன் ஆகிய பொருட்களை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி இன்று(மே24) நேரில் ஆய்வு மேற்கொண்டு, இந்த குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆணையர், ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் குற்றவாளிகளைப் பிடிக்க குற்றவாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க புதிய நவீன கருவிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குற்றச்செயல்களில் நூதன முறையில் எப்படி பணியாற்றுவது என்பது குறித்து காவலர்கள் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதேபோன்று கள்ளச்சாராய விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையில் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் விதமாக காவலருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, வருகின்றது. ஆப்ரேஷன் 2.0 கஞ்சா விற்பனையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் இதுபோல் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர் மீது குண்டர் சட்டம் பாயும்.

அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் சொத்துகளும் முடக்கம் செய்யப்படும்' எனவும் தெரிவித்தார்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0..! கஞ்சா விற்பனை தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம்

அதே போன்று அனைத்து காவலர்களும் 'என்னை நேரடியாக சந்திக்கலாம்' எனவும், தானே குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சாராய விற்பனை - பொதுமக்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details