தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகாரிகளால்தான் விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்கிறது: உயர் நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தான் சட்டவிரோதமான விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Nov 16, 2019, 9:24 PM IST

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்தை சீல் வைப்பது தொடர்பாக நடுவட்டம் பேரூராட்சி செயல் அதிகாரி, நிலத்தின் உரிமையாளரான ஃபரீஸ் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனை ரத்து செய்யக்கோரி ஃபரீஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானத்தை முறைப்படுத்தக் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக, மனுதாரர் ஃபரீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து வருவதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்ட அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடத்திற்கு எதிராக சட்டவிதிகளின்படிதான் நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீலகிரி மலைப் பகுதியைப் பாதுகாக்க, சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர்.

அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டுமெனவும் அமல்படுத்தியது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால்தான் விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆயுதப்படை காவலரின் செல்ஃபோனை பறித்த பலே ஆசாமிகள்!

ABOUT THE AUTHOR

...view details