தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமான வரித்துறைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றார் ஓபிஎஸ்

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார்.

வருமான வரித்துறைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றார் ஓபிஎஸ்
வருமான வரித்துறைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றார் ஓபிஎஸ்

By

Published : Mar 1, 2023, 1:22 PM IST

Updated : Mar 1, 2023, 8:55 PM IST

சென்னை:தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்டு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015-16ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (மார்ச். 1) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:முறையான சாலை வசதி இல்லாமல் தாழ்தள பேருந்தை இயக்க முடியாது: போக்குவரத்துத்துறை விளக்கம்

Last Updated : Mar 1, 2023, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details