சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் விமானத்துறை உள்ளிட்ட பிற துறைகளின் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் பேசியதாவது; "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த தகவல்களை அரசு அதிகாரப்பூர்வமாக அளித்து வருகிறது. அவர்களை மட்டும் மக்கள் நம்பினால் போதுமானது. வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 318 பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
68 நபர்களின் ரத்தம் பரிசோதனை செய்ய எடுக்கப்பட்டது. அவர்களில் 59 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.
'கொரோனா வைரஸ்: எல்லோரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை' - அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையங்களில் பரிசோதனைகளில் ஈடுபடுபவர்கள், மருத்துவர்கள், சளி, இருமல் உள்ளவர்கள் மட்டும் முகமூடி அணிந்தால் போதுமானது. அனைவரும் முகமூடி போட வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. நாங்களும் முகமூடி போடாமல் தான் உள்ளோம். வெப்பநிலை அதிகம் என்பதால் நம்மூரில் கொரோனா பரவாது என உறுதியாக நாம் சொல்ல முடியாது" என்றார்.
இதையும் படிங்க:பெண்கள் தின விழாவில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பங்கேற்பு