தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை!

சென்னை: ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை எனவும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை
ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை

By

Published : Jun 13, 2020, 8:39 PM IST

சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 37 ஆயிரத்து 716 பேர் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 70 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும், அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, நேற்று மாநில முன்தினம் அரசு வழக்கறிஞரிடம், சென்னையில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைகள் முடிந்த பின் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது, சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும்,கரோனா அறிகுறி இருந்தால் மக்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கரோனா தொற்றை மக்கள் ஒரு களங்கமாக பார்க்க கூடாது, அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அப்போது, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு சார்பில் அப்படி எந்த அதிகாரப்பூர்வ உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை, அது வெறும் வதந்தி எனவும், இ-பாஸ்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையின்றி பாலியல் தொழிலுக்குச் சென்ற இளம்பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details