கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு வித கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி, மாநகரப் பேருந்துகளில் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு விதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
’டாஸ்மாக், பார்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை’ - மதுப்பிரியர்கள் ஆசுவாசம்
கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில் பல கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. ஆனால் டாஸ்மாக், பார்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
டாஸ்மாக், பார்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை
இந்த நிலையில் டாஸ்மாக், பார்கள் போன்றவற்றுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது மதுப்பிரியர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கரோனா அதிகரிக்கும் நிலையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு