தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரம்: 9 பேரை கைது செய்தது என்ஐஏ

சட்டவிரோதமாக இந்தியா மற்றும் இலங்கையில் போதைப்பொருள் மற்றும் ஆயுதத்தை கடத்தி விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக இலங்கையை சேர்ந்த 9 பேரை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரம்
போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரம்

By

Published : Dec 20, 2022, 6:44 AM IST

சென்னை: இந்தியா, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூலை 20 ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரியவர்களின் தொடர்பான 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

குணா என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜ் ஆகிய இலங்கை போதைப்பொருள் மாஃபியா கும்பல் தலைவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜா சலிம் என்பவரோடு இணைந்து போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டிலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து தாமாக முன்வந்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்தது.

சோதனையில் வழக்கு தொடர்பான பல டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காகவும் அதன் வன்முறை நடவடிக்கைகளுக்காகவும் பணியாற்றி வருகின்றனர் என விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த 9 பேரை திருச்சி அகதிகள் முகாமிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (டிச.19) கைது செய்தனர்.

குறிப்பாக மூளையாக செயல்பட்ட புடாய் என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்மின், அழகப்பெருமாக சுனில் காமினி பொன்சேனா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ என்கிற எழிலோன், லடியா சந்திர சேனா, தணுக்கா ரோஷன், வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'வாரிசு' படம்: சபரிமலையில் பேனர் வைத்து வழிபட்ட ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details