தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் மேலும் தளர்வு: 75 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்?

சென்னை: அடுத்தக் கட்ட தளர்வாக 75 விழுக்காடு அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

75 விழுக்காடு அரசு அலுவலகங்கள் இயங்க திட்டம்
75 விழுக்காடு அரசு அலுவலகங்கள் இயங்க திட்டம்

By

Published : May 26, 2020, 5:46 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அமைத்த சிறப்பு மருத்துவ நிபுணர் குழு உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதில், "பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தளர்வுகளை அரசு வழங்கக் கூடாது. தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் நோய்த் தொற்று சற்று குறைந்து இருந்தாலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது" என மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தக் கட்ட தளர்வாக அரசு அலுவலகங்கள் 75 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம். அதே அளவில் அவர்களை பேருந்தில் பயணிக்க வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை கண்காணித்த பின்பே பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு முடிவு செய்ய உள்ளது.

முன்னதாக இக்கூட்டத்தில், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தமிழ்நாட்டில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறப்பு பயண பாஸ் முறைகேடுகளுக்கு கடுமையான நடவடிக்கை - தலைமைச் செயலாளர்

ABOUT THE AUTHOR

...view details