மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பல்வேறு விதிகளின்படி மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனும் சொற்றொடர் மதுபாட்டில்களில் பதியப்பட்டது. இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இச்சொற்றொடர் மாற்றப்பட்டுள்ளது.
மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்னும் புதிய சொற்றொடரை மதுபாட்டில்களில் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் மீது ஆயத்தீர்வை வரி பிப் 2ஆம் தேதி உயர்த்தப்பட்டது.