தமிழ்நாடு

tamil nadu

உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

By

Published : Nov 12, 2021, 1:12 PM IST

அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளை (நவ. 13) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

new low pressure area near andaman  new low pressure area  new low pressure area will be formed near andaman  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு பகுதிc  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (நவ. 11) மாலை 5.15 மணியளவில் சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கி, இரவு 7.45 மணி அளவில் முழுவதுமாகக் கரையைக் கடந்தது.

இக்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுவதுமாகக் கரையைக் கடந்தபோது, 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், நாளை (நவ. 13) அந்தமான், அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வி மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 200 ஏக்கர்... அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் வெள்ள நீரில் நனைந்து சேதம்

ABOUT THE AUTHOR

...view details