சென்னை செங்குன்றம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் வியாபாரத்தை முடித்துவிட்டுஇரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். ஊழியர்கள் நேற்று மதியம் வழக்கம்போல கடையை திறந்தபோது டாஸ்மாக்கின் பின்புற சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் நேற்று வியாபாரம் முடித்து வைத்துவிட்டுப் போன ரூ.4.75 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சோதனை நடத்தினர். டாஸ்மாக்கின் பின்புறம் உள்ள பாரின் வழியாக உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், டாஸ்மாக்கின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.