தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய கீதத்தில் பிழை: கல்வியாளர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கிய இலவச பாடநூலில் இடம்பெற்ற 'தேசிய கீதத்தில்' பிழை இருப்பதைக் கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

By

Published : Jun 19, 2019, 11:07 AM IST

தமிழ்நாடு அரசு சார்பாக அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கும் புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கு முன்னர் பலமுறை பிழை திருத்தம் செய்த பின்னரே புத்தகம் அச்சிடும் பணி நடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு கல்வித் துறையின் சார்பில் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் பிழையுடன் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிழையாக உள்ள தேசிய கீதம்

இரண்டாம் வகுப்பு கணக்கு சூழ்நிலையியல் பாடநூலில் தொகுதி இரண்டில் உள்ள தேசிய கீதத்தின் இறுதியில், 'ஜன கண மங்கள தாயக ஜய ஹே' என்பதற்கு பதிலாக 'ஜன கண மன அதி நாயக ஜயஹே' என தவறுதலுடன் அச்சாகி உள்ளது. நாட்டின் தேசப்பற்றை வளர்க்கும் தேசிய கீதத்தை ஆரம்பக் கல்வியிலேயே அவசர கோலத்தில் பள்ளிக் கல்வித் துறை தவறாக அச்சிட்டு வழங்கியுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கீதம்

எனவே, இது குறித்து பள்ளிக் கல்வித் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிழையாக உள்ள தேசிய கீதத்தை மாற்றி பிழையற்ற தேசிய கீதத்தை அச்சிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் 'தேசிய கீதம்' தவறுதலாக அச்சிடப்பட்டுள்ள பக்கம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details