தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லக்ஷ்மி அகர்வால் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன் - நடிகை நமீதா கருத்து!

சென்னை: ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் நம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக உள்ளார் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

By

Published : Nov 18, 2019, 3:36 AM IST

namitha

சென்னையில் உள்ள நட்சத்திர தனியார் ஓட்டலில் நடிகை சந்தோஷி ஒரு நாள் 'மேக் அப் மற்றும் ஹேர்' கருத்தரங்கை நடத்தினர். இந்த கருத்தருங்கில் ஒப்பனைக் கலைத்துறையில் உள்ள சந்தேகங்கள், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள், சிகை அலங்காரம் குறித்து நடிகை சந்தோஷி ஆலோசனைகள் வழங்கினார். இதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலும் கலந்துக்கொண்டார். இதில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

நமீதா பத்திரிக்கையாளர் சந்திப்பு

இதில் நமீதா பேசுகையில், இன்று எனக்கு மிகச்சிறந்த நாள் ஏனென்றால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலை சந்தித்துள்ளேன். அவர் மிகச்சிறந்த ரோல் மாடல். நம்ம நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அவர் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக உள்ளார். என் வாழ்க்கையில் எவ்வளோ பிரச்னைகள் உள்ளன.

நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

ஆனால் இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எனது பிரச்னைகள் ஒன்றும் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இதுபோன்ற ஒரு அற்புதமான நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details