தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நமது புரட்சித் தொண்டன்' பெயரில் பத்திரிகை தொடங்கிய ஓபிஎஸ் அணி! - சென்னை செய்திகள்

Namathu puratchi thondan Newspaper : தமிழ்நாடு மக்களின் நலன் காக்கும் பத்திரிகையாக ”நமது புரட்சி தொண்டன்” பத்திரிக்கை செயல்படும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Ops Launch newspaper
Ops Launch Newspaper

By

Published : Aug 21, 2023, 5:46 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் "நமது புரட்சித் தொண்டன்" நாளிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி இராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நாளிதழின் ஆசிரியராக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்சி, சின்னம், தலைமைக் கழகம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. மேலும், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது அம்மா" பத்திரிகையும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றது. அதிமுகவில் தான் நீக்கப்பட்டது செல்லாது என ஓர் ஆண்டிற்கும் மேல் சட்டப்போராட்டம் மேற்கொண்ட ஓபிஎஸ்க்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என ஓபிஎஸ்-யை வலியுத்தி வந்தனர்.

இந்த நிலையில் "நமது புரட்சி தொண்டன்" என்ற பத்திரிகையை இன்று (ஆகஸ்ட் 21) ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். இந்த நாளிதழை தொடங்கி வைத்த பேசிய ஓ.பன்னீர்செல்வம், நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும், தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர். நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும் என கழக தொண்டர்களின் கோரிக்கையால் தான் "நமது புரட்சி தொண்டன்" என்கிற நாளிதழை தொடங்கியுள்ளோம்.

இரண்டாம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக அதன் பரிமாணத்தை அடைந்து மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றி வருகிறோம். நாளிதழின் பொறுப்பை மருது அழகுராஜ் ஏற்று உள்ளார். எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தில் இருந்து குறைந்துவிடாமல் எதிர் கட்சிகளும் பாராட்டும் விதமாக கருத்துக்களை முன்வைத்து அண்ணா வழியில் "நமது புரட்சி தொண்டன்" நாளிதழ் செயல்பட வேண்டும்.

தொண்டர்களிடம் இருந்து ஆண்டு சந்தா பெற்று உள்ளோம், எனவே, நீங்களும் நாளிதழில் பங்குதாரா்கள் தான். அதன் படி என்றும் இந்த நாளிதழ் செயல்படும். எம்.ஜி.ஆர் வகுத்த சட்டம், தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை, தொண்டனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும், அதற்கு சிறு களங்கம் ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக தான் "நாம் புரட்சி தொண்டன்" நாளிதழ் இருக்கும்.

ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதனை உச்சநிலையில் நிறுத்துவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பது நான் அறிவேன். நீங்களும் உறுதுணையாக நின்று பணியாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்கும் பத்திரிக்கையாக "நமது புரட்சி தொண்டன்" பத்திரிக்கை இயங்கும் என கூறினார்.

இதையும் படிங்க:சுதந்திர தின விழா மேடையில் ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்படாதது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details