தமிழ்நாடு

tamil nadu

காவலர் பணியில் 50 விழுக்காடு சிறார் மாணவர்கள் - கூடுதல் காவல் ஆணையர்

சென்னை: சிறார் மன்ற மாணவர்களில் 50 விழுக்காட்டினர் காவல்துறை பணியில் சேர்ந்திருப்பதாக கூடுதல் காவல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 24, 2019, 12:47 AM IST

Published : Nov 24, 2019, 12:47 AM IST

சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை வடக்கு காவல் சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் விஜயலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கூடுதல் காவல் ஆணையர் தினகரன், 'சென்னையில் 57 சிறார் மன்றங்கள் உள்ளன. இது போன்ற நிகழ்ச்சி தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறுகிறது என்றார்.

சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

தொடர்ந்து, 'சிறார் மன்றங்களில் உள்ள மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், இதில் படிக்கும் மாணவர்களில் 50 விழுக்காட்டினர் ஏற்கனவே காவல் பணியில் சேர்ந்திருக்கிறார்கள்' என்றார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசும்போது, 'சென்னையில் உள்ள சிறார் மன்றங்கள், கூடுதல் ஆணையர் கண்காணிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்களில் கல்வி, விளையாட்டு மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சியை நல்ல முறையில் வழங்கி வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒருநாள் காவல் ஆணையரான’ - 5 சிறார்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details