தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2020, 1:59 PM IST

ETV Bharat / state

ஜனநாயகப் படுகொலை செய்த திமுக - கு.க. செல்வம் குற்றச்சாட்டு!

சென்னை: திமுக கட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.

கு.க செல்வம் குற்றச்சாட்டு
கு.க செல்வம் குற்றச்சாட்டு

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் ஆகஸ்ட் 4ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து பேசினார். அடுத்த நாள் கமலாலயத்தில் நடைபெற்ற ராமர் பூஜையில் காவித் துண்டு அணிந்து பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதோடு, ஏன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து கு.க. செல்வம் விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால், அவரை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைமை நேற்றைய (ஆக.13) தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஆக. 14) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் கு.க. செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கு.க. செல்வம் குற்றச்சாட்டு

அப்போது பேசிய அவர், "கட்சியிலிருந்து என்னை நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது. வேறு ஏதாவது கட்சி வாய்ப்பு அளித்தால் ஆயிரம் விளக்குத் தொகுதியிலேயே போட்டியிடுவேன். திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இருந்து வெளியே வர வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் யார் என தற்போது என்னால் சொல்ல முடியாது.

மு.க. ஸ்டாலினிடம் நான் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாகக் கூறியும், என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இது நியாயம் இல்லை. திமுக ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது. இதில் திமுக இளைஞர் அணிச்செயலர் உதயநிதி ஸ்டாலின் தலையீடு இருந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனது நீக்கம் இயற்கை நீதிக்கு எதிரானது' - திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்

ABOUT THE AUTHOR

...view details