தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்பிஆர் விவகாரம் - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை: என்பிஆர் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

By

Published : Mar 11, 2020, 1:34 PM IST

Updated : Mar 11, 2020, 1:54 PM IST

சட்டப்பேரவையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், என்பிஆர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோன்று காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்காததை எதிர்த்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்," என்பிஆர் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு பாதிப்பு இல்லை என்று தொடர்ந்து, பேரவையில் தவறான தகவலை அதிமுக அரசு தெரிவித்து வருகின்றது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் என்பிஆருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் என்பிஆர் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எம்எல்ஏ உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் தமிமுன் அன்சாரி.

இதையடுத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது என்பிஆர் விவகாரம் தொடர்பாக, "பிகார் அரசுக்கு இருக்கும் துணிச்சல், தமிழக அரசுக்கு இல்லையா" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் வைத்து, சட்டப்பேரவை வளாகத்தில் தமிமுன் அன்சாரி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து, அங்கேயே அமர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதையும் படிங்க:'தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்த சான்றிதழும் சமர்பிக்கத் தேவையில்லை'- ஆர்.பி. உதயகுமார்!

Last Updated : Mar 11, 2020, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details