தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக அரசின் பாதந்தாங்குவதே சுகம் என்று நடக்கும் அதிமுக'  - மு.க. ஸ்டாலின்

சென்னை: ஊழல் என்பதே நோக்கம் பாஜக அரசின் பாதந்தாங்குவதே சுகம் என்று நடக்கும் அதிமுகவின் ஆளுநர் உரையினால் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை என மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mk-stalin
mk-stalin

By

Published : Jan 6, 2020, 2:01 PM IST

இது குறித்து மு.க. ஸ்டாலின் அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். இந்த ஆட்சியில் முதலமைச்சருடன், அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்துவருகின்றனர்.

கொடநாடு முதல் குட்காவரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம்வரை என எங்குப் பார்த்தாலும் கணக்கற்ற ரெய்டுகள். 4 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையும், 5 லட்சம் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன.

நீட் தேர்வில் இரட்டை வேடம், தொழில் வளர்ச்சி இல்லை, வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறைவோ, நிம்மதியோ இல்லை.

நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு வாக்களித்துள்ளது. நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம் - அரசுத் துறைகள் - அதிமுக எனும் கூட்டணி அமைத்து அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது.

'ஊழல் என்பதே நோக்கம், பாஜக அரசின் பாதந் தாங்குவதே சுகம்' என்று நடக்கும் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப்புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

ABOUT THE AUTHOR

...view details