தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்!

சென்னை: அப்போலோ மருத்துவனையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின்  நேரில் சென்று நலம் விசாரித்தார்.

MK Stalin meet kamal

By

Published : Nov 22, 2019, 2:04 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல் ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கமல்ஹாசனின் காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக, அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.

இந்நிலையில் சென்னை அப்போலோவில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று அக்கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவனைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கமல் ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க:

'போர்க்குற்றவாளியை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' - விசிக நாளை ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details