நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மியாட் மருத்துவமனை 2021 பிப்ரவரி 3ஆம் தேதி, கரோனா தடுப்பூசி போடும் பணியில் இணைந்தது. மாநகராட்சி ஆதரவுடன், மியாட் அதன் முன்னணி பராமரிப்பாளர்களுக்குத் தடுப்பூசி போட தொடங்கியது.
கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மியாட் மருத்துவமனை நிறுவனர்!
சென்னை: மியாட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், " மியாட் நிர்வாக இயக்குநர் பி.வி.ஏ.மோகன்தாஸ் முதல் கரோனா தடுப்பூசியை ஊழியர்கள் முன்னால் எடுத்துக்கொண்டு ஊக்கப்படுத்தினார். இதையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களும் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.
தற்போதுவரை, மியாட்டில் 1000க்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை, அரசு வெளியிட்ட பிறகு மக்கள் தடுப்பூசியைத் தயக்கமின்றி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். நாம் ஒன்றாக இணைந்து, இந்தியாவை கோவிட் 19 நோய் இல்லாத நாடாக மாற்றுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.