தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெ.அன்பழகனை காண நேரில் சென்ற அமைச்சர்- முதலமைச்சருக்கு நன்றி கூறிய மகன்!

சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ .அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

minister vijayabaskar
minister vijayabaskar

By

Published : Jun 5, 2020, 4:39 PM IST

சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு நேற்று முதல் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடலில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, ஜெ.அன்பழகன் சிகிச்சை பெறும் மருத்துவமனை தலைமை மருத்துவரைத் தொடர்புகொண்டு அன்பழகனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தமிழ்நாடு அரசு சார்பாக ஜெ. அன்பழகனுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளது என தெரிவித்திருந்தார்.

ஜெ அன்பழகன் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கும் அமைச்சர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்குச் சென்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல் நலம் குறித்தும் உதவிகள் செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர், ரேலா மருத்துவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறிய படி ரேலா மருத்துவக் குழுவினரிடம் 20 நிமிடம் ஜெ.அன்பழகனின் நலன் குறித்தும், மருத்துவப் பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தோம். இதனையடுத்து, அவரது மகனிடனும் அரசு எல்லா வித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன். அதற்கு அவரது மகன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்" எனக் கூறினார்.

பின்னர் பேசிய ரேலா மருத்துவமனையின் தலைவர் மொஹமத் ரேலா, "மூச்சுத் திணறல் காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மூச்சுத் திணறல் அதிகமானதால் 80 விழுக்காடு வரை சுவாசத்துக்குத் தேவையான காற்று வென்டிலேட்டர் மூலம் அளிக்கப்பட்டது.

தற்போது அளிக்கபட்ட சிகிச்சையில் 40 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், சமூகவலைதளங்களில் பரவும் வதங்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க:ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details