தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 1:09 AM IST

Updated : Mar 11, 2020, 1:23 AM IST

ETV Bharat / state

'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'

சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்று இருந்த நபர் குணமடைந்துவிட்டார் என்றும் இதன் மூலம் தமிழ்நாடு கொரோனா தொற்று இல்லாத மாநிலாமாக மாறியுள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர் கொரோனா  தமிழ்நாடு கொரோனா தொற்று  கொரோனா தொற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை  காஞ்சிபுரம் கொரோனா  corona affected person cured  minister vijayabaskar tweet
அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்

மேலும், அவர் குணமடைந்ததற்கு காரணம் மருத்துவர்களின் கவனமான சிகிச்சையும் நிபுணத்துவமே காரணம் என்றும் இதன் மூலம் தமிழ்நாடு கொரோனா வைரஸ் தொற்றில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ் - வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்!

Last Updated : Mar 11, 2020, 1:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details