தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பெரியண்ணன், கருக்கக்குறிசியில் 110KV திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “அங்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நீர், புறம்போக்கு நிலமாக உள்ளதால் மீண்டும் இடம் தேடி வருகிறோம். நிலம் கிடைத்தவுடன் விரைவில் தொடங்குவோம்.
இடம் கிடைப்பது மட்டுமே கடினமாக உள்ளது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடத்தை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 340 துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என பெருமிதம் கொண்டார்.