சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், " தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆலோசனைப்படி பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள் பொது தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சியடையும் வகையில் மூன்றாண்டுகளுக்கு தேர்ச்சி முறை அறிவிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.