சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், அதன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்போது வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் அமைக்கப்பட்டது.