சென்னை ஆவடியை அடுத்த கோவில்பதாகை, தண்டுறை, திருநின்றவூர் போன்ற பகுதிகளில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று ஆவடியை அடுத்த திருநின்றவூர் எம்.ஜி.ஆர் நகரில் கவசா தொண்டு நிறுவனம் மூலம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினார்.
'இறந்தவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்'
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதித்த உடல்களை அடக்கம் செய்ய கட்சிகளின் தூண்டுதலின் பேரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திருநின்றவூரில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது. இதுபோல போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள். அவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும். சுங்கச்சாவடி கட்டணத்தை இந்த கரோனா சமயத்தில் ரத்து செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். மேலும் பத்திரிகை நிவாரண நிதியை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் அவர்களுக்கு நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... கரோனா தொற்றால் சிகிச்சையில் இருக்கும் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் ஸ்டாலின், உதயநிதி நலம் விசாரிப்பு