தமிழ்நாடு

tamil nadu

தேனாம்பேட்டை மண்டலம் முன்னுதாரணமாக திகழ்கிறது - அமைச்சர் காமராஜ்

By

Published : Jul 8, 2020, 8:54 AM IST

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

minister kamaraj press Meet
minister kamaraj press Meet

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்கிறது. மண்டலம் ஒன்பதுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன. அதில் 741 தெருக்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 விழுக்காடு குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு முன் உதாரணமாக திகழ்கிறது.

தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1000 களப் பணியாளர்கள், 200 சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆயிரத்து 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, வீடு வீடாக சென்று சோதனை செய்வது பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்வது என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 1134 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில், 77 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details