தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் இந்தி திணிப்பு கூடாது' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: "இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தியை திணிக்கக் கூடாது" என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

By

Published : Jun 3, 2019, 11:23 PM IST

ஜெயகுமார்

சென்னை நந்தம்பாக்கத்தில் டிரேட் சென்டரில் அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் " சேலம் எட்டுவழிச்சாலை தடை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். விவசாயிகள் நலம் இதில் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்.

மும்மொழி கொள்கையை பொறுத்தவரை இந்தி பேசுபவர்கள் இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் இந்தியை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தி பேச விரும்பாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details