இது குறித்து அவர் அதில், “கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ராயபுரம் மண்டலம், ராயபுரம் சட்டப்பேரவை தொகுதி மக்களுக்காக...
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஒரு சமயத்தில் ராயபுரம் மண்டலத்தில் (ராயபுரம் மண்டலம் என்பது ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஐந்து வட்டங்கள், துறைமுகம் தொகுதியில் ஆறு வட்டங்கள், எழும்பூர் தொகுதியில் இரண்டு வட்டங்கள், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டு வட்டங்கள் என மொத்தம் 15 வட்டங்களை உள்ளடக்கியது) மிக அதிக அளவில் காணப்பட்டது.
ராயபுரம் மண்டலத்தில் ஏப்ரல் மாதம் 191 பேருக்கு என்றிருந்த தொற்று, ஜூன் மாதம் ஐந்தாயிரத்து 414 பேருக்கு என்ற அளவில் பரவியது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது ஆகஸ்ட் மாதத்தில் தொற்றானது 402 பேருக்கு என்று வெகுவாகக் குறைந்துள்ளது.
தொகுதியில் உள்ள ஆறு வட்டங்களில், ஏப்ரல் மாதம் 57 பேருக்கு என்றிருந்த தொற்று அதிகபட்சமாக ஜூன் மாதம் ஆயிரத்து 678 என்ற அளவிற்குப் பரவி, அரசு நடவடிக்கைகளின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 82 ஆக குறைந்துள்ளது.
ராயபுரம் மண்டல மக்களுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் ஜெயக்குமார்! ராயபுரம் மண்டலத்திலும், ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் தீநுண்மி தொற்று வெகுவாகக் குறைந்துவருவதற்கு அரசு மட்டுமல்லாது நீங்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் காரணம். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தீநுண்மி தொற்று இனி நம்மோடுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், இந்தத் தீநுண்மி தொற்றுக்கான தடுப்பூசி வரும்வரை, இந்தத் தீநுண்மி நம்மைத் தொற்றாமல் இருக்க, அரசு கூறும் ஆலோசனைகளான - முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை நாம் தொடர்ந்து கவனமாகக் கடைப்பிடிப்போம். ராயபுரம் மண்டலத்திலும், ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் கரோனா தொற்றே இல்லை என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்” என அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...சென்னை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க குழு அமைப்பு!