தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2022, 2:24 PM IST

ETV Bharat / state

திமுக ஓராண்டு ஆட்சியை அதிமுகவினர் புகழவா செய்வார்கள் - துரைமுருகன் கிண்டல்

திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பேசியுள்ளார்.

Minister Duraimurugan says how AIADMK will praise DMK government for one year rule திமுக ஓராண்டு ஆட்சியை அதிமுக வை புகழவா செய்வார்கள் அமைச்சர்  துரைமுருகன் கிண்டல்
Minister Duraimurugan says how AIADMK will praise DMK government for one year rule திமுக ஓராண்டு ஆட்சியை அதிமுக வை புகழவா செய்வார்கள் அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

சென்னை: கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்த 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.

முன்னதாக சென்னை கோட்டூர்புரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் காரிய மண்டபத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர். இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு என்னை சென்று பார்வையிட வேண்டும் என பரிந்துரைத்தனர். எனவே இங்கு வந்து பார்த்த போது இந்த பூங்கா அற்புதமாக உள்ளது.

கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, 2.23 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறோம்" என தெரிவித்தார்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள் என்று கிண்டலாகப் பேசிய துரைமுருகன், எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள் என்றார். அதுமட்டுமின்றி எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "டிரிப்பில் ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை: பின்னணியில் புதிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details