இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்குமார், மத்திய அரசு அறிவித்துள்ள வணிகர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘சுயதொழில் செய்யும் வணிகர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும்’
சென்னை: பொருளாதார மாற்றத்தின் காரணமாக பாதிப்படைந்த சுயதொழில் செய்யும் வணிகர்களை காப்பாற்றிட அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவைத் தலைவர் முத்துக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல், கோயம்பேட்டில் சிறு வணிகர்களை பாதிக்கும் நின்ஜாகார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் வணிகர் நல வாரியத்தை மீண்டும் புதுப்பித்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், பொருளாதார மாற்றத்தின் காரணமாக பாதிப்படைந்த வணிகர்கள் வாங்கிய கடன்களை வட்டியுடன் தள்ளுபடி செய்து, சுயதொழில் செய்யும் வணிகர்களை காப்பாற்றிட அரசு முன்வர வேண்டும் எனவும் முத்துக்குமார் கோரிக்கை வைத்தார்.