தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2019, 7:40 PM IST

ETV Bharat / state

அமித்ஷாவின் சர்வாதிகார பேச்சுக்கு வரலாறு பாடம் கற்றுக்கொடுக்கும்: வைகோ!

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்வாதிகாரப் பேச்சிற்கு, வரலாறு தக்க பாடம் கற்றுக்கொடுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

mdmk-leader-vaiko-pressmeet-after-all-party-meeting
mdmk-leader-vaiko-pressmeet-after-all-party-meeting

இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ’குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி வருகின்ற 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள், கட்சி சார்பற்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறும் பேச்சுக்கே இடமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதைப் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, வரலாற்றில் சர்வாதிகார எண்ணத்துடன் பலர் இவ்வாறு கூறியுள்ளனர். அதே வரலாறு அவ்வாறு பேசுபவர்களுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுத்துள்ளது என வைகோ பதிலளித்தார்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details