சென்னை: கடல்சார் தொன்மை வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சில ஆண்டு காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று (அக்.5) புற்றுநோய் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று (அக்.6) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா பாலு திருச்சி உறையூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவ பாலசுப்ரமணியன் பல ஆண்டுகள் இவர், வேலையின் காரணமாக ஒரிசாவில் வாழ்ந்து வந்தார். இதனால், இவரை அனைவரும் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டு வந்தனர். மேலும், வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டும். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதைக் கண்டறிந்து புத்தங்கள் மூலமாகவும், இவரின் பேச்சின் மூலமாகவும் வெளியில் கொண்டு வந்தார்.
மேலும், இவர் தொடர்ந்து, கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மூலம் குமரிகண்டம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறியப்பட்டு வருகிறது. இவரின் குமரிகண்டம் ஆய்வு குறித்து வெளிநாடுகள் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த சிலநாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு (அக்.5) அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அடுத்த குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழர்களின் மதிப்பை உயர்த்துவதற்காக, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.