தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் விவகாரம் முதல் ஜெயலலிதா பல்கலைக்கழக பெயர் நீக்கம் வரை... சட்டமன்றத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

Tamil Nadu state Assembly Special Meeting : ஆளுநர் 10 சட்ட மசோதாக்களை நிராகரிக்கவில்லை என்றும் நிறுத்தி வைத்துள்ளதாகவே தான் கருதுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 6:41 PM IST

EPS
EPS

சென்னை : தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித் தீர்மானம், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் என அனைவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாக்களையும் நிராகரிக்கவில்லை நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன் எனவும் ஆளுநர் மசோதாக்களை withhold செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதாவது நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார் என்றார். நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை, அதன் மூலம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத் தான் தெரிகிறது. எனவே மசோதாக்களை மறு ஆய்வு செய்வதில் சட்ட சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார்".

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை, திருப்பி அனுப்பி வைத்துள்ளார், ஏதோ ஒரு சட்ட மசோதாவில் அளித்த ஆலோசனையில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுவது போல ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஆளுநர்கோ, குடியரசு தலைவருக்கோ சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது வித் ஹோல்டு என்று சொல்லுவது நிராகரிக்கப்படுவதாக பொருள் என்று விளக்கினார்.

தொடர்ந்து, மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்கான அனுமதி அளிக்க சபாநாயகர் என்ற அடிப்படையில் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், எந்த வித மாற்றங்களும் இல்லாமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பும் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதில் குறிக்கீட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சொல்ல வேண்டிய கருத்துக்களை எல்லாம் சபாநாயகர் நீங்களே தெரிவித்து வருகிறீர்கள், அனைத்து இலாகாக்களையும் நீங்களும் வைத்துக் கொள்ளலாம் எனவும் ஒவ்வொரு அமைச்சருக்கு என்று தனியாக இலகாக உள்ளது, ஆனால் எதை பேசினாலும் ஒரு சிலரே எழுந்து பேசுகிறார்கள் அவர்களின் இலாகா வரும் போது பேசினால் சரி" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுவிட்டது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த வழக்கிலேயே நல்ல தீர்ப்பு கிடைத்துவிட்டால், இந்த சிறப்பு கூட்டம் கூட்டியதற்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும்.

ஏன் இந்த அவசரம் அனைத்து மசோதாக்களையும் சுட்டிக்காட்டி வழக்க தொடுக்கப்பட்டதா, முதல்வரை வேந்தராக்கும் மசோதா அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டபோது, அதை திமுக எதிர்த்தது. யாருக்கும் வக்காலத்து வாங்கி பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடா" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில், அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். முந்தைய காலங்களில் முதல்வருடன் கலந்து பேசி தான் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் இவ்வாறாக இப்பொழுது இருக்கும் ஆளுநர்கள் செயல்படவில்லை" என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றுவதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாகவும் இதற்காக அதிமுக வெளியிடப்பு செய்வதாகவும் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க :ஜெயலலிதா பல்கலை பெயர் மாற்ற விவகாரம்; அதிமுக வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details