தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தமானில் கைதான சென்னையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி!

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை தனிப்படை போலீசார் அந்தமானில் கைது செய்தனர்.

By

Published : Apr 5, 2022, 8:08 AM IST

குற்றவாளி man-arrested-in-andamans-historical-record-offender-from-chennai அந்தமானில் கைதான சென்னையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி! என்ன நடந்தது..
குற்றவாளி man-arrested-in-andamans-historical-record-offender-from-chennai அந்தமானில் கைதான சென்னையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி! என்ன நடந்தது..

சென்னை:சின்னமலையைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியாக இருந்து பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது காஞ்சிபுரம் செய்யூர் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனைவியிடம் தகராறு:சின்னமலையில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தின் 8-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் ரஞ்சித்க்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரஞ்சித்தின் மனைவிக்கு தெரிந்து இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்:இந்த நிலையில் வேறொரு பெண்ணுடனான தொடர்பு குறித்து மனைவியிடம் தனது கார் ஓட்டுநர் கூறியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி, ஓட்டுநரை அழைத்த ரஞ்சித், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் ஓட்டுநர் 8-வது மாடியில் இருந்து கயிறு மூலம் 3-வது மாடி வரை இறங்கி பின் அங்கிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்த ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொலை முயற்சி வழக்கு பதிவு:இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது கொலை வழக்கு பதிவு செய்து கிண்டி காவல்துறையினர், அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவானது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, ரஞ்சித்தின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் அவர் அந்தமானுக்குத் தப்பிச் சென்றதும், அங்கு தலைமறைவாக பதுங்கியிருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.

அதனடிப்படையில் அடையாறு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்தமானுக்கு விரைந்து அங்கு பதுங்கியிருந்த ரஞ்சித்தை கைது செய்தனர். பின், அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று (ஏப்.4) சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை அழைத்து வரப்பட்ட ரஞ்சித்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளில் கிண்டி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தமானில் கைதான சென்னையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி! என்ன நடந்தது..

இதையும் படிங்க: அசானி புயல்: சென்னை to அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details