தமிழ்நாடு

tamil nadu

சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யவில்லை - மநீம பொதுச்செயலாளர்

By

Published : Mar 1, 2021, 5:45 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

mnm
mnm

மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பவர்களுக்கு இன்று (மார்ச் 1) நேர்காணல் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக பொதுக்குழு, செயற்குழுவில் உள்ள 38 பேருக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. பின் மதியம் காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் குமரவேல்

நேர்காணல் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் குமரவேல், "இந்தத் தேர்தலில் கண்டிப்பாக மூன்றாவது அணி அமையும். அது கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியும் பெறும். கடலூரில் பிடிபட்ட மக்கள் நீதி மய்யம் பரிசுப் பொருள்களை உரிய ஆவணங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து மீண்டும் எடுத்துச் சென்றுள்ளோம்.

மக்கள் நீதி மய்யம் நேர்மையை பிரதானமாகக் கொண்ட கட்சி என்பதால் தேர்தலில் பரிசுப் பொருள்கள் கொடுப்பது பணம் பட்டுவாடா செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட மாட்டோம். சிலருக்கு டிஜிட்டல் முறையில் நேர்காணல் நடந்தது. இன்று (மார்ச் 1) மாலைக்குள் சுமார் 50 நபர்களுக்கு மேலாக நேர்காணல்களை நடத்தி முடிக்கவுள்ளோம்.

தொகுதியின் நிலை, தொகுதிக்குத் தேவையானவை உள்ளிட்டவை குறித்தும் வேட்பாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வுசெய்யவில்லை. மார்ச் 7ஆம் தேதியன்று தேர்தல் வேட்பாளர் முதற்கட்ட அறிவிப்பும் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேட்பாளர்கள் தேர்வுக்கு டீம் ரெடி - கமல் ஹாசன் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details