தமிழ்நாடு

tamil nadu

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 1:29 PM IST

Salem Periyar University VC: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சாதிப்பெயரைச் சொல்லி ஊழியரை அழைத்ததாக வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்த், இது தொடர்பாக சேலம் நீதிமன்றம் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து காவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதேநேரம், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, துணை வேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பணபரிமாற்றம் நடைபெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதா என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படவில்லை என சுட்டிக் காட்டிய நீதிபதி, துணை வேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதேநேரம், வழக்கில் குற்றம் இருப்பதாக நீதிமன்றம் கருதினால், விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:விடுமுறை நாட்களில் பல்கலையில் ஆய்வு செய்த துணைவேந்தர்? பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details