சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இன்று மாணவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்..!
சென்னை: லயோலா கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவர் தேர்தலின் போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஜிஷ்ணு என்பவர் தலைவராகாவும், துணைத் தலைவராக பிலிப்ஸ் என்ற மாணவரும், இணைச்செயலாளராக மணிமாறன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு பேருந்து தினம் என்கின்ற பெயரில் சென்னை புதுக்கல்லூரி, பச்சையப்பன் உள்ளிட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேருந்தின் மேலே ஏறி பயணம் செய்து விழுந்ததும், அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நகர் அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டிப் புரண்டு சாலையில் சண்டையிட்டதும் என ஒரே வாரத்தில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.