தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2023, 6:10 PM IST

ETV Bharat / state

TN Assembly: "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

TN Assembly: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும், தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக மாறி வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

law
law

TN Assembly:சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதி வழங்கவில்லை என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு இரண்டு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பெண் காவலர் புகார் அளித்தும், வழக்குப் பதிய தாமதமானது ஏன்?

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. கஞ்சா அதிகளவு விற்பனையாகிறது. பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் அதிகம் விற்பனையாகிறது. ஆனால், அதனைப் பற்றி அவையில் பேச அனுமதிக்கவில்லை. தினந்தோறும் கஞ்சா பிடிபட்டதாக செய்தி வருகிறது. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு இல்லை. பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் சபாநாயகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, அதனை கண்டித்துதான் கருப்பு சட்டை அணிந்துள்ளோம்.

ஒரு பத்திரிகையில் போதைப்பொருளை வைத்திருந்த 1,858 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு உருமாறி வருகிறது. புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமை விவகாரத்தில் அரசு உண்மைகளை மறைத்து செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி பேரவையில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆவின் ஊழியர்கள் பணிநீக்கம்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details